விஜய் ஆண்டனி பெண் யூடியூபர் மேல் வழக்கு?! பரபரக்கும் திரைத்துறை!!
நடிகர் விஜய் ஆண்டனி குறித்து பொய்யான தகவலை பரப்பிய யூடியூப் சேனல் மீது அவர் மான நஷ்ட வழக்கு தொடரப்போவதாக அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் தலைநகர் சென்னையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பனையூரில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் 'மறக்குமா நெஞ்சம்' என்ற இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் குளறுபடி காரணமாக ரசிகர்கள் கடும் அவதிப்பட்டனர். அதிக கட்டணம் செலுத்தி டிக்கெட் வாங்கியவர்களை கூட உள்ளே அனுமதிக்காத நிலையும் ஏற்பட்டது. இந்த முறையற்ற ஏற்பாடுகளுக்கு காரணம் நிகழ்ச்சி பொறுப்பாளர்கள் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், பாஜக யாத்திரைக்கான பாடலை இசையமைத்து தராததால் கோபமான அண்ணாமலை, ஏ.ஆர்.ரஹ்மானின் நிகழ்ச்சியில் குளறுபடி ஏற்படுத்த திட்டமிட்டார். இதற்கான பேரங்கள் நடைபெற்றன. இந்த பேரத்திற்கு சமீபத்தில் பாஜகவினருக்கு நெருக்கமாக வலம் வரும் விஜய் ஆண்டனி துணை போனதாகவும் அந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வீடியோவால் மனவேதனை அடைந்த இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, இது முற்றிலும் பொய்யான தகவல் என மறுப்பு தெரிவித்துள்ளர். அத்துடன் குறிப்பிட்ட சேனல் மீது மானநஷ்ட வழக்கு தொடரப்படும் எனவும், இதில் வரும் தொகையை நலிவடைந்த இசைத்துறை நண்பர்களுக்கு முழுமையாக கொடுக்கவும் முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். அவரது வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!