undefined

 காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

 

தமிழகத்தில் திருச்சி மாவட்டம் முக்கொம்பு அணை காவிரியில் 35000 கன அடியும் , கொள்ளிடம் ஆற்றில் 1.20 லட்சம் கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. எனவே காவிரி, கொள்ளிடம் என 2 ஆறுகளிலும், தண்ணீர் இருகரைகளையும் தொட்டபடி ஆர்ப்பரித்து ஓடுகிறது. இந்த 2  ஆறுகளிலும் பொதுமக்கள் குளிக்க வேண்டாம் என திருச்சி மாநகர மற்றும் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் ”  மேட்டூர் அணையிலிருந்து அதிகப்படியான உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால், முக்கொம்பு அணையிலிருந்து காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் அதிகளவு நீர் திறக்கப்பட்டுள்ளது. காவிரி, கொள்ளிடம் ஆற்றங்கரையோர கிராமங்களில் உள்ள மக்கள், சலவைத் தொழிலாளர்கள் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.  

தேவைப்பட்டால் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும்.  இந்தப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. ஆற்றில் குளிக்கவோ, நீந்தவோ, மீன்பிடிக்கவோ அல்லது பொழுது போக்கவோ பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. ஆற்றுப்பகுதிகளில் பாதுகாப்பற்ற கரையோரங்கள் மற்றும் ஆபத்தான பகுதிகளில் நின்றுகொண்டு பொதுமக்களோ அல்லது மாணவர்களோ செல்பி எடுக்க வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  
ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக பொதுமக்களுக்கு உதவிகள் தேவைப்பட்டால் உடனடியாக நுண்ணறிவு பிரிவு 0431-2331929, 9498100615, வாட்ஸ் அப் 9626273399, கட்டுப்பாட்டு அறை 0431 - 2418070, வாட்ஸ்அப் 9384039205 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.  

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!