பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம்... நவம்பர் 6ல் முக்கிய தீர்மானம் எதிர்பார்ப்பு!
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே கடந்த மாதம் தொடங்கிய இராணுவ மோதல்கள் தொடர்ந்து தீவிரமடைந்த நிலையில், இரு நாடுகளும் தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இணங்கியுள்ளன. இதனால், இரண்டு நாடுகளுக்குமிடையிலான உறவுகள் மீண்டும் சுமூக நிலைக்குத் திரும்பும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
2021ஆம் ஆண்டு தலீபான் ஆட்சியை கைப்பற்றியதிலிருந்து, ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் இடையே வன்முறை மோதல்கள் இடைவிடாமல் நிகழ்ந்து வருகின்றன. சமீபத்தில் காபூலில் நடந்த குண்டுவெடிப்புக்கு பாகிஸ்தான் விமானப்படை தாக்குதலே காரணம் என ஆப்கானிஸ்தான் குற்றம் சாட்டியது. இதற்குப் பதிலடி என ஆப்கான் தலீபான் அமைப்புகள் எல்லை தாண்டி நடத்திய தாக்குதலில் பாகிஸ்தான் வீரர்கள் பலர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.
இரு தரப்பினரும் மாறி மாறி நடத்திய தாக்குதல்களால் எல்லைப் பகுதிகள் பதட்டமாக மாறிய நிலையில், பாகிஸ்தான் ஆப்கான் எல்லையில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து நடத்தும் தாக்குதல்களும் பெரும் உயிரிழப்பை ஏற்படுத்தின. இதனால் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம், போக்குவரத்து மற்றும் மக்களின் அன்றாட வாழ்க்கை பெரும் பாதிப்புக்குள்ளானது.
இந்த சூழலில், துருக்கி மற்றும் கத்தார் நாடுகள் நடுவராக அமைந்து இரு நாடுகளையும் பேச்சுவார்த்தைக்கு அழைத்தன. இஸ்தான்புலில் நான்கு நாட்கள் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் தொடக்கத்தில் முடிவின்றி முடிந்தாலும், நேற்று இரவு நடைபெற்ற புதிய சுற்று பேச்சுவார்த்தையில் இரு தரப்பினரும் தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர் என துருக்கி வெளியுறவு அமைச்சகம் அறிவித்தது.
தலீபான் அரசின் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் கூறியதாவது: “ஆப்கானிஸ்தான் பாகிஸ்தானுடன் நல்லுறவை விரும்புகிறது. போர் நிறுத்தத்தை உறுதிசெய்யும் வகையில் வரும் நவம்பர் 6ஆம் தேதி இரு நாடுகளுக்கும் இடையே முக்கியமான பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. அதில் தீர்மானிக்கப்பட்ட முடிவுகள் பிராந்திய அமைதிக்குப் பெரும் வழிகாட்டியாக இருக்கும்,” என்றார்.
இதேவேளை, பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீர் தெரிவித்துள்ளார்: “ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளுடன் பாகிஸ்தான் அமைதியை விரும்புகிறது. ஆனால், ஆப்கான் மண்ணிலிருந்து வரும் எல்லைத் தாண்டிய பயங்கரவாதத்தை இனி பொறுத்துக்கொள்ள முடியாது,” எனக் கடுமையாக எச்சரித்துள்ளார்.இரு நாடுகளுக்கும் இடையிலான இந்த போர் நிறுத்தம் நீடித்த அமைதிக்கு வழிவகுக்குமா என்பதற்காக, உலக நாடுகள் ஆவலுடன் காத்திருக்கின்றன.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!