சந்திரசேகரராவ் மகன் உட்பட பிஆர்எஸ் தலைவர்கள் வீட்டுக்காவலில் அடைப்பு... பெரும் பரபரப்பு!
தெலங்கானாவில் அரசு பேருந்து கட்டண உயர்வை எதிர்த்துப் போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்த பாரதிய ராஷ்டிரிய சமிதி (பிஆர்எஸ்) கட்சித் தலைவர்கள், வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மின்சார பேருந்துகள் வாங்க நிதி திரட்டும் நோக்கில், தெலங்கானா போக்குவரத்துக் கழகம் "பசுமை வரி" எனப்படும் புதிய வரியை அறிவித்தது. இதைத் தொடர்ந்து, நகரப் பேருந்துகளின் கட்டணங்களில் திங்கள்கிழமை முதல் அதிகரிப்பு செய்யப்பட்டது. இந்த மாற்றத்துக்கு எதிராக, பிஆர்எஸ் கட்சி வியாழக்கிழமை பேரணி நடத்தத் திட்டமிட்டிருந்தது.
அதற்காக கட்சியின் செயல் தலைவர் கே.டி. ராமா ராவ், முன்னாள் அமைச்சர் ஹரீஷ் ராவ் உள்ளிட்டோர் பேருந்து பயணம் செய்து போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டிருந்தனர். பின்னர் அவர்கள் போக்குவரத்துக் கழக அலுவலகத்திற்குச் சென்று மனு அளித்து, செய்தியாளர்களை சந்திக்கவிருந்தனர்.
ஆனால், இதையடுத்து ஹைதராபாத் மற்றும் ரங்காரெட்டி மாவட்டங்களில் போலீசார் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தனர். மேலும், கே.டி. ராமா ராவ் (கச்சிபௌலி), ஹரீஷ் ராவ் (கோகபேட்) ஆகியோர் வீட்டுக்குள்ளேயே காவலில் வைக்கப்பட்டதாக பிஆர்எஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேபோல், முன்னாள் அமைச்சர் பி. சபிதா இந்திரா ரெட்டி, எம்எல்ஏ விவேகானந்த கவுட், எம்எல்சி ஷம்பிர்பூர் ராஜு ஆகியோரும் வீட்டுக்குள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!