2 நாள்களுக்கு மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்!
ஆயுத பூஜை மற்றும் காந்தி ஜெயந்தி விடுமுறை நாள்களையொட்டி 2 நாட்களுக்கு மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று அக்டோபர் 1ம் தேதி மற்றும் நாளை அக்டோபர் 2ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி பின்பற்றப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மெட்ரோ ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் மெட்ரோ ரயில்கள் காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை கீழ்கண்ட கால இடைவெளியில் அடிப்படையில் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி பகல் 12 முதல் இரவு 8 மணி வரை 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. காலை 5 மணி முதல் பகல் 12 மணி வரை மற்றும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை 10 நிமிட இடைவெளியில் இயக்கப்படும். இரவு 10 முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!