சென்னை எலியாட்ஸ் பீச் மொத்தமா மாறப் போகுது... ரூ.1.61 கோடி செலவில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்தியேக மரப்பாதை!
சென்னை பெசண்ட் நகர் எலியாட்ஸ் கடற்கரை மொத்தமாக மாறப் போகுது. சென்னை மாநகராட்சி சார்பில் பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரையில் சுமார் ரூ.1.61 கோடியில் மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்தியேக மரப்பாதை அமைக்கப்படுவதற்கான பணிகள் துவங்கி நடைபெற்று வருகின்றன.சென்னை மாநகராட்சி சார்பில் மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டது போன்று பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரையிலும் ரூ.1.61 செலவில் மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்தியேக மரப்பாதை அமைக்கும் பணிகளை தொடங்கியுள்ளது. மாற்றுத்திறனாளிகளும் கடல் அலையை அருகே சென்று ரசிக்க வேண்டும். கடல் அலையில் கால்களை நனைத்து மகிழ வேண்டும் என்றும், அதற்கான வசதிகளை அரசு ஏற்படுத்தி தர வேண்டும் என்பதும் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது.
இந்த கோரிக்கையைக் கருத்தில் கொண்டு களமிறங்கி இருக்கிறது சென்னை மாநகராட்சி நிர்வாகம். மத்திய சுற்றுச்சூழல் துறையினரிடம் சிறப்பு சுற்றுச்சூழல் அனுமதி பெற்று சென்னை மெரினா கடற்கரையில் 380 மீட்டர் நீளத்திற்கு, 3 மீட்டர் அகலத்தில் மரப்பாதை அமைத்து கொடுத்துள்ளது. இது மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களின் பெற்றோர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பலரும் இதைப் பயன்படுத்தி கடல் அலையின் அருகே சென்று ரசித்து மகிழ்ந்தனர்.
இதனைத் தொடர்ந்து பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரையிலும் இதே போன்று அமைத்து தர வேண்டும் என்று மாற்றுத்திறனாளிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் மாநகராட்சி நிர்வாகம் ரூ.1 கோடியே 61 லட்சத்தில் 190 மீட்டர் நீளம், 2.90 மீட்டர் அகலம் கொண்ட மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்தியேக மரப்பாதையை அமைக்க மாநகராட்சி தற்போது பணிகளை தொடங்கியுள்ளது.
இந்த பணிகளுக்கும் மாநகராட்சி சார்பில் சுற்றுச்சூழல் அனுமதி பெறப்பட்டுள்ளது. அந்த அனுமதியில், எலியாட்ஸ் கடற்கரைப் பகுதிகள் ஆமை முட்டையிடும் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளதால், கான்கிரீட் கட்டுமானங்கள் எதையும் செய்யக்கூடாது என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. அதனால் 100 சதவீதம் மரக்கட்டைகளால் இந்த பாலம் அமைக்கப்பட இருப்பதாகவும், பணிகள் 4 மாதங்களில் முடிக்கப்படும் என்றும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!