உலக செஸ் அரங்கில்  சாம்பியன் பட்டம் வென்ற வைஷாலி... சாதனை!  

 

சைப்ரஸ் நாட்டில் நடைபெற்ற கேண்டிடேட்ஸ் செஸ் தொடரின் பெண்கள் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த வைஷாலி சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார். நேற்று நடைபெற்ற விறுவிறுப்பான கடைசி சுற்று ஆட்டத்தில் ரஷ்ய வீராங்கனை கேத்ரினா லாக்னோவை எதிர்கொண்ட வைஷாலி 48-வது நகர்த்தலில் அவரை வீழ்த்தி அபார வெற்றி பெற்றார். இதன் மூலம் 14 சுற்றுகளின் முடிவில் 8.5 புள்ளிகளுடன் அவர் முதலிடத்தைப் பிடித்தார்.

இந்த வெற்றியின் மூலம் கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்றுப் பெருமையை வைஷாலி பெற்றுள்ளார். 24 வயதான இவர் 5 வெற்றி, 7 டிரா மற்றும் 2 தோல்விகளுடன் இந்தத் தொடரை நிறைவு செய்துள்ளார். இந்த ஆண்டின் இறுதியில் நடைபெறவுள்ள பெண்கள் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் நடப்பு சாம்பியனான சீனாவின் ஜூ வென்ஜூனுடன் மோதவும் அவர் தகுதி பெற்றுள்ளார்.

ஒரே ஆண்டில் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆண்கள் பிரிவில் குகேஷும், பெண்கள் பிரிவில் வைஷாலியும் என இரு தமிழக வீரர்கள் பங்கேற்க இருப்பது இந்தியாவிற்குப் பெருமை சேர்த்துள்ளது. வைஷாலியின் இந்தச் சாதனைக்குத் தமிழக முதல்வர் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். உலகக் கோப்பை செஸ் போட்டியில் இந்தியக் கொடி உயரப் பறக்கும் என விளையாட்டு ஆர்வலர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

 பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை