அதிர்ச்சி... நடுரோட்டில் பெண்ணை கட்டிப்பிடித்து சில்மிஷம்.. அதிர வைத்த வாலிபர்!
சேலம் மாவட்டம் அம்மாப்பேட்டை கிருஷ்ணன்புதூர் பகுதியைச் சேர்ந்த 39வயதுடைய பெண் ஒருவர், அந்த பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான பவர் லூம் பட்டறை ஒன்றில் வேலைக்கு சென்று வருகிறார்.இந்நிலையில், கடந்த 15ம் தேதி, அவர் வழக்கம் போல் வேலைக்கு சென்றுவிட்டு, மதிய உணவிற்காக வீட்டிற்கு சென்று உணவருந்தி விட்டு, மீண்டும் வீட்டில் இருந்து பட்டறைக்கு புறப்பட்டு சென்றார்.
அப்போது அவரைப் பின்தொடர்ந்து வந்த வாலிபர் ஒருவர் திடீரென நடுரோட்டில் அந்த பெண்ணை கட்டிப்பிடித்து, கீழே தள்ளி நடுரோட்டில் பாலியல் தொல்லைக் கொடுத்து தகாத முறையில் ஈடுபட முயன்றார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண், அலறி கூச்சலிட்டார்.
பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் திரண்டு சென்று அந்த பெண்ணை மீட்டனர். அதற்குள் பொதுமக்கள் கூட்டம் கூடியதையடுத்து அங்கிருந்து வாலிபர் தப்பியோடி விட்டார். இந்த காட்சிகள் அனைத்தும் அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமிராவில் பதிவான நிலையில், வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.
இது குறித்து பாதிக்கப்பட்ட பெண், வீராணம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டனர். இதில், பெண்ணிடம் தகாத முறையில் நடந்துக் கொண்டவர் மன்னார்பாளையம் பிரிவு பகுதியை சேர்ந்த கண்ணன்(28) என்பது தெரிய வந்து, போலீசார் கண்ணனைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா