பாகிஸ்தான்–ஆப்கானிஸ்தான் எல்லையில் மீண்டும் மோதல்... 5 வீரர்கள் உயிரிழப்பு!
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையிலான உறவில் நீண்டகாலமாக பதற்றமான சூழல் நீடித்து வருகிறது. ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்துவரும் தலிபான்கள், இருநாட்டு எல்லையில் கிளை அமைப்பை தொடங்கி பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதாக பாகிஸ்தான் குற்றஞ்சாட்டி வருகிறது. மேலும், “தெஹ்ரீக் இ தலிபான்” என்ற அமைப்பு பாகிஸ்தானில் தாக்குதல் நடத்துவதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
சமீபத்தில் இரு நாடுகளுக்கிடையே மோதல் ஏற்பட்டு பலர் உயிரிழந்தனர். பின்னர் கத்தாரில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது சண்டையை நிறுத்த இருதரப்பும் ஒப்புக்கொண்டன. எனினும், துருக்கியில் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தையில் இதுவரை உறுதியான உடன்பாடு எட்டப்படவில்லை. இதனால் எல்லைப் பகுதிகளில் பதற்றம் தொடர்கிறது.
இந்த நிலையில், பாகிஸ்தான்–ஆப்கானிஸ்தான் எல்லையில் நேற்றுமுன் தினம் மீண்டும் கடும் மோதல் ஏற்பட்டது. இதில் பாகிஸ்தான் பாதுகாப்புப் படை வீரர்கள் 5 பேர் உயிரிழந்தனர். அதேசமயம், ஆப்கானிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகள் பாகிஸ்தானுக்குள் நுழைய முயன்றதாகவும், நடந்த துப்பாக்கிச்சண்டையில் 25 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த மோதலால் எல்லை பகுதியில் மீண்டும் கடும் பதற்றம் நிலவி வருகிறது
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!