நாளை 10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான அட்டவணை வெளியீடு.. மாணவர்கள் உற்சாகம்!
நாளை நம்பவர் 4ம் தேதி, தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், மாநிலப் பள்ளிக் கல்வித் திட்டத்தில் இயங்கும் தனியார் பள்ளிகளில் பயிலும் 10வது மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியிடப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நவம்பர் 4ம் தேதி மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள் கலந்துக் கொள்ளும் ஆலோசனைக் கூட்டத்தில் பொதுத் தேர்வு அட்டவணை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்படும். கூட்டத்தின் நிறைவில் நாளை 10வது மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு அட்டவணைகள் வெளியிடப்படும்” என்று தெரிவித்தார்.
நிகழ் கல்வியாண்டுக்கான (2025-2026) பொதுத் தேர்வு அட்டவணை அக்டோபர் மாத இறுதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தாலும், தயாரிப்புப் பணிகளில் தாமதம் ஏற்பட்டதால் அட்டவணை நவம்பர் முதல் வாரத்தில் வெளியாகும். பிளஸ் 1 வகுப்புக்கான பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்புகளுக்கான அட்டவணை அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு நாளை நவம்பர் 4ம் தேதி வெளியிடப்பட திட்டமிடப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!