காலநிலை செயற்பாட்டாளர் சோனம் வாங்சுக் கைது... லடாக்கில் பெரும் பரபரப்பு!

 


 
லடாக்கில் மாநில அந்தஸ்து மற்றும் அரசியலமைப்பின் 6 வது அட்டவணை உட்பட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்துள்ளது.  4 பேர் உயிரிழந்து 80க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்த நிலையில், சுற்றுச்சூழல் ஆர்வலரும் ராமன் மக்சேசே விருது பெற்றவருமான சோனம் வாங்சுக் கைது செய்யப்பட்டார். செப்டம்பர் 25 ம் தேதி ” இந்த காரணத்திற்காக எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படுவதற்கு தயார்” என   கூறிய ஒரு நாளுக்குப் பிறகு இந்தக் கைது நடந்தது.


மத்திய அரசு, வாங்சுக் தூண்டுதல் பேச்சுகளால் கூட்டத்தை வன்முறைக்கு தூண்டியதாக குற்றம்சாட்டியுள்ளது. கைதுக்கு ஒரு நாள் முன்பு, வாங்சுக்கின் ‘ஸ்டூடென்ட்ஸ் எஜுகேஷனல் அண்ட் கல்ச்சுரல் மூவ்மென்ட் ஆஃப் லடாக்’  அமைப்பின் வெளிநாட்டு நிதி பெறுவதற்கான FCRA பதிவு மத்திய உள்துறை அமைச்சகத்தால் ரத்து செய்யப்பட்டது.
இந்த நடவடிக்கை, வாங்சுக்கின் நடவடிக்கைகளை அரசு கண்காணித்து வருவதை சுட்டிக்காட்டுகிறது. ஆனால், வாங்சுக் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். தனது அமைப்பு வெளிநாட்டு நிதி பெறவில்லை எனவும், ஐ.நா., சுவிஸ், இத்தாலி அமைப்புகளுடன் வணிக பரிவர்த்தனைகள் மட்டுமே செய்து, அனைத்து வரிகளையும் செலுத்தியதாகவும் NDTVயிடம் தெரிவித்துள்ளார்.  


லடாக்கில் செப்டம்பர் 24ம் தேதி  நடந்த லெஹ் அபெக்ஸ் பாடி   ஏற்பாடு செய்த போராட்டம், வேலைவாய்ப்பின்மை மற்றும் உள்ளூர் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் இல்லாமை போன்ற பிரச்சினைகளை மையமாகக் கொண்டு வன்முறையாக மாறியது. இதில் BJP அலுவலகம் தீக்கிரையாக்கப்பட்டு, வாகனங்கள் அழிக்கப்பட்டன. வாங்சுக்கின் அரபு ஸ்பிரிங் மற்றும் நேபாள ஜென் Z இயக்கங்கள் பற்றிய குறிப்புகள் தூண்டுதலாக இருந்ததாக அரசு குற்றம்சாட்டியது.  மத்திய அரசு, உயர் அதிகார குழு மூலம் லடாக் கோரிக்கைகளை பரிசீலித்து வருவதாகவும், பழங்குடி இடஒதுக்கீட்டை 84% ஆக உயர்த்தியதாகவும், 1800 பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு தொடங்கியதாகவும் கூறப்படுகிறது. கைதைத் தொடர்ந்து, லெஹ் மற்றும் கார்கிலில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு, 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?