அறிமுகமில்லாதவர் கொடுத்த பானம்... 18-வது பிறந்தநாளில் படுத்த படுக்கையான இளம்பெண்... பகீர் வீடியோ!
இங்கிலாந்தில் தனது 18-வது பிறந்தநாளைக் கோலாகலமாகக் கொண்டாட இரவு விடுதிக்குச் சென்ற மில்லி டாப்லின் என்ற இளம்பெண்ணுக்கு ஏற்பட்ட கதி, காண்போரை நிலைகுலைய வைத்துள்ளது. விடுதியில் அறிமுகமில்லாத ஒரு நபர் கொடுத்த பானத்தைக் குடித்த சில நிமிடங்களிலேயே, மில்லியின் உடல் முழுமையாகச் செயலிழந்து விறைத்துப் போனது. அவரது விரல்கள் கோணிக்கொண்டு, முகம் விகாரமடைந்த நிலையில் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்தக் கோரச் சம்பவத்தின் வீடியோவைப் பகிர்ந்த மில்லியின் தாய், மற்ற பெண்களுக்கு உருக்கமான எச்சரிக்கை ஒன்றைத் விடுத்துள்ளார். பொது இடங்களுக்குச் செல்லும் பெண்கள், அறிமுகமில்லாதவர்கள் தரும் எந்தவொரு தின்பண்டத்தையோ அல்லது பானத்தையோ ஒருபோதும் வாங்கி அருந்த வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். 'டிரிங்க் ஸ்பைக்கிங்' (Drink Spiking) எனப்படும் இந்த ஆபத்தான செயல், இரவு விடுதிகளில் பெண்களின் பாதுகாப்பு குறித்த அச்சத்தை மீண்டும் அதிகரித்துள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!