undefined

இன்று கோவை-தன்பாத், ஆலப்புழா தன்பாத் சிறப்பு ரயில்கள் முழுவதுமாக ரத்து... பயணிகள் அவதி!

 

இன்று செப்டம்பர் 23ம் தேதி கோவை-தன்பாத் சிறப்பு ரயில் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். 

இது குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “கோவையில் இருந்து ஜார்கண்ட் மாநிலம் தன்பாத் நகருக்கு வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்-03680) இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை வழியாக இயக்கப்படுகிறது.

இந்நிலையில், இணைப்பு ரெயில் ரத்து செய்யப்பட்டதால் கோவை-தன்பாத் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்- 03680) இன்று 23ம் தேதி முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

இதைபோல ஆலப்புழாவிலிருந்து காலை 6 மணிக்கு புறப்படும் ஆலப்புழா - தன்பாத் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-13352) 23ம் தேதி முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது” என்று கூறப்பட்டுள்ளது

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?