undefined

கடைக்குள் புகுந்த கல்லூரி பேருந்து  ... 4 பேர் பலி! 

 
 

 

மதுரை மாவட்டம் அழகர்கோவில் அருகே சாலையோர கடைக்குள் கல்லூரி பேருந்து புகுந்து ஏற்பட்ட விபத்தில் நால்வர் காயம் அடைந்தனர்.அழகர்கோவில் சுற்றுவட்டாரத்தில் பல தனியார் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. தினமும் மதுரை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து மாணவர்கள் கல்லூரிகளுக்கு பேருந்துகளில் அழைத்து செல்லப்படுகின்றனர்.

இன்று காலை மதுரை மாவட்டம் அழகர்கோவில் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரி பேருந்து மாணவர்களை ஏற்றிக்கொண்டு சென்றபோது, பூண்டி என்ற இடத்தில் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் உள்ள கடைகளில் மோதியது.இந்த விபத்தில் கடையில் இருந்த ஆறுமுகம் என்பவரின் இரு கால்களும் துண்டாகி, அவர் கடுமையாக காயமடைந்தார்.

உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், பேருந்து ஒரு ஷேர் ஆட்டோ மீது மோதியதில் அதில் இருந்த மூன்று பேரும் காயம் அடைந்தனர். காயமடைந்த நால்வரும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கல்லூரி வாகனங்கள் தினமும் வேகமாக செல்வதால், அவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!