விஷமாகும் உணவு... சவர்மா சாப்பிட்டு கல்லூரி மாணவி பலி... 13 பேருக்கு வாந்தி, மயக்கம்!!

 

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வரும் மாணவிக்கு செப்டம்பர் 16ம் தேதி சனிக்கிழமை பிறந்தநாள் இதனை முன்னிட்டு   தன்னுடைய நண்பர்கள்  13 பேருக்கு ட்ரீட் கொடுப்பதற்காக நாமக்கல் - பரமத்தி சாலையில் உள்ள தனியார் அசைவ உணவகத்திற்கு  அழைத்து சென்றார்.  அங்கு சவர்மா உள்ளிட்ட அசைவ உணவுகளை சாப்பிட்டு உள்ளனர்.
இதேபோல், நாமக்கல் பரமத்தி சாலையில் உள்ள சந்தைப்பேட்டை புதூர் பழனிசாமி தெருவில் வசித்து வருபவர்  தவக்குமார். அவரது மனைவி, மகள் கலையரசி   மைத்துனர் என நான்கு பேர் அதே ஹோட்டலில் சமர்வா பார்சல் வாங்கி வந்துள்ளனர். நேற்று செப்டம்பர் 17ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று காலை திடீரென 13 பேருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

கல்லூரி விடுதி ஊழியர்கள் அவர்களை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 
இதுகுறித்து தகவல் அறிந்த நாமக்கல் மாவட்ட ஆட்சியர் டாக்டர் உமா, மருத்துவக் கல்லூரி முதல்வர் சாந்தா அருள்மொழி ஆகியோர் சிகிச்சை பெற்று வரும் மாணவிகளை  நேரில் சந்தித்து   நலம் விசாரித்தனர். மேலும் பரமத்தி சாலையில் செயல்பட்டு வரும் உணவகத்திற்கு சென்று மாவட்ட ஆட்சியர் உமா ஆய்வு செய்தார்.   சிக்கன் மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பவும், உணவகத்தை சீல் வைக்கவும் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.  இதனையடுத்து அங்கிருந்த சிக்கன்களை பினாயில் கொண்டு அழித்த உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் உணவகத்திற்கு சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர்.


 இந்த உணவகத்தில் வாங்கிச் சென்ற சவர்மாவை சாப்பிட்ட சந்தைப்பேட்டை புதூரை சேர்ந்த தவக்குமாரின் மகள் கலையரசி மற்றும் அவரது அம்மா சுஜாதா, அத்தை கவிதா, மாமா பூபதி, மாமன் மகள் சுனோஜி ஆகியோருக்கும் வாந்தி மயக்கம் ஏற்பட்டது. கலையரசியை    நாமக்கல் பரமத்தி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு நேற்று மாலை சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.   மற்ற நால்வருக்கும் வயிற்றுப்போக்கு வாந்தி அதிகமாகவே நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். மருத்துவமனையில் இருந்து   வீட்டுக்கு திரும்பிய பள்ளி மாணவி கலையரசி வாந்தி மயக்கம் அதிகம் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இறந்த மாணவியின் உடல் நாமக்கல் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து  தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை