சென்னையில் அதிர்ச்சி... வீடு புகுந்து கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை!

 

சென்னை வடபழனியில் வீடு புகுந்து கல்லூரி மாணவிக்கு மது போதையில் இருந்த வாலிபர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த மாணவியின் புகாரின் அடிப்படையில் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போலீசார்  வாலிபரை போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சென்னை வடபழனி பகுதியில் வசித்து வரும் 17 வயது கல்லூரி மாணவி ஒருவர், கல்லூரியில் படித்துக் கொண்டே பகுதி நேரமாக வீட்டின் அருகில் உள்ள மருந்து கடையில் வேலை செய்து வருகிறார். இவர் வேலை முடிந்து தனியாக வீட்டுக்கு நடந்து சென்றுக் கொண்டிருந்த போது, மாணவியை பின்தொடர்ந்து சென்ற வாலிபர், வீடு புகுந்து மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. அதிர்ச்சி அடைந்த மாணவி கத்தியை எடுத்து மிரட்டியதால் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இது குறித்த மாணவியின் புகாரின் பேரில் வடபழனி அனைத்து மகளிர் போலீசார் மற்றும் குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில் சம்பவம் நடந்தது உண்மை என தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகள் அடிப்படையில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சாலிகிராமத்தைச் சேர்ந்த குமரேசன் (30), என்பவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

போலீசாரின் விசாரணையில் குமரேசன், வடபழனியில் உள்ள அவரது உறவினர் வீட்டுக்கு வந்து மது அருந்தினார். அப்போது தனியாக சென்ற கல்லூரி மாணவியை போதையில் பின் தொடர்ந்து சென்று வீடு புகுந்து பாலியல் தொல்லை கொடுத்தது தெரிந்தது.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?