அதிர்ச்சி வீடியோ... மெட்ரோ ரயில் வழித்தடத்தில் கல்லூரி மாணவி தற்கொலை முயற்சி...!!
மத்திய டெல்லியின் ஷாதிபூர் மெட்ரோவில் கல்லூரி மாணவி ஒருவர் வந்திறங்கினார். அவர் ஷாதிபூர் நிலையத்திலிருந்து திடீரென மெட்ரோ ரயில் தண்டவாளத்தின் திசையில் நடக்க தொடங்கினார். இதனை கண்ட ரயில் பயணிகள், பொதுமக்கள் கத்தி கூச்சலிட்டனர். அத்துடன் மெட்ரோ நிர்வாகத்துக்கும் தகவல் அளிக்கப்பட்டது. அத்தனை பேரின் குரலுக்கும் செவி சாய்க்காத இளம்பெண் திடீரென மெட்ரோ மேம்பாலத்தின் பக்கவாட்டுத் தடுப்பில் கால் வைத்து ஏற முயன்றார்.
அங்கிருந்து சாலையில் குதிக்க முயற்சித்தார். பாலத்தின் கீழே சென்று கொண்டிருந்தவர்கள் கூச்சலைக் கேட்டதும் வாகனங்களை நிறுத்தி குதிக்க வேண்டாம் என எச்சரிக்கை விடுத்தனர். இதனால் சாலையில் வாகனங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டு சில நிமிடங்கள் போக்குவரத்து ஸ்தம்பித்தது. அந்த பெண் எதையும் காதுகொடுத்து கேட்காமல் மொபைலில் யாருடனோ கோபமாக பேசிக்கொண்டிருந்தார். அதை மட்டும் நிறுத்தவே இல்லை. மொபைலில் பேசிக்கொண்டிருந்த மற்றொருவரிடம் கல்லூரி மாணவி தற்கொலை மிரட்டல் நாடகத்தை அரங்கேற்றிக் கொண்டிருந்ததாக பின்னர் ஒப்புக் கொண்டார். அதற்குள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மெட்ரோ பணியாளர்கள் கல்லூரி மாணவியிடம் பேச்சுக் கொடுத்து,அவரை தற்கொலை முயற்சியிலிருந்து காப்பாற்றினர்.
அதன் பின்னர் அந்த கல்லூரி மாணவி மெட்ரோ ரயில் நிலைத்துக்கு அழைத்து வரப்பட்டு அவருக்கு மருத்துவர்கள் மூலம் கவுன்சிலிங் கொடுக்கப்பட்டது. அதன்பிறகு மாணவியின் பெற்றோர் வரவழைக்கப்பட்டு அவர்களிடம் மாணவி ஒப்படைக்கப்பட்டார். சாதாரண குடும்ப விவகாரம் காரணமாக கல்லூரி மாணவி தனது பெற்றோருடன் பிணக்கில் இருந்ததும், அதனையொட்டி அவர் தற்கொலை முயற்சி மற்றும் மிரட்டலில் ஈடுபட்டதாக விசாரணையில் தெரிவித்தார்.
ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்
தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்
கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!
சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!