undefined

மாலை, வளையல் , சீர்வரிசையுடன்  100 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு... கிருத்திகா உதயநிதி அட்ராசிட்டி!!

 

தமிழகத்தில் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் . முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் அடுத்தடுத்து கோவில்களுக்கு சென்று  வருவது வழக்கம். அந்த வரிசையில் தற்போது கிருத்திகா உதயநிதியும் கலந்து கொண்டுள்ளார்.  இன்று சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள சமுதாய நலக் கூடத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பாக வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

<a href=https://youtube.com/embed/IOPFXBjVbsY?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/IOPFXBjVbsY/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" title="வளைகாப்பு நிகழ்ச்சி: கிருத்திகா உதயநிதி பங்கேற்பு" width="752">

இந்த  சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் கிருத்திகா உதயநிதி கலந்து கொண்டு சிறப்பித்தார்.   இது குறித்து  மேடையில் பேசிய கிருத்திகா உதயநிதி, ‘’நானும் 2  குழந்தைகளின் தாய் தான்.  பெண்கள் தங்களின் கர்ப்ப காலத்தில்  மனநலன் மற்றும்  உடல் நலன்  பேணுவது முக்கியம். குழந்தையின் ஆரோக்கியம் மிகவும் முக்கியம். கர்ப்பிணிகள் ஆரோக்கியமான  குழந்தையை பெற்றெடுக்க வாழ்த்துகள்’’ என பேசியுள்ளார்.  


இதனைத் தொடர்ந்து வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 100 கர்ப்பிணிகளுக்கும் மாலை மற்றும் வளையல் அணிவித்தார். பின்னர்  பழங்கள், சத்துமாவு, புடவை அடங்கிய சீர்வரிசை தட்டையும் வழங்கினார்.  அவர்களுடன் சேர்ந்து குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார். இந்த புகைப்படங்கள் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!