இன்று தமிழக அரசியல் கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை... வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம்
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடர்பாக தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி இன்று ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தைச் சேர்த்து 12 மாநிலங்களில் இந்தப் பணிகள் வரும் நவம்பர் 4ஆம் தேதி தொடங்கவுள்ளன.
இந்த சிறப்பு திருத்தத்துக்கு திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தேர்தல் அதிகாரி இன்று மாலை 4 மணிக்கு அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகளுடனும் விவாதிக்கவுள்ளார். 24 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தில் இத்தகைய தீவிர திருத்தப் பணி நடைபெறுவதால் இதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.
2002ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலை அடிப்படையாகக் கொண்டு திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது. அந்தப் பட்டியலில் பெயர் உள்ளவர்கள் உறுதிப்படிவம் அளிக்க வேண்டும்; பெயர் இல்லாதவர்கள் பிறந்த தேதி, இருப்பிட சான்று போன்ற ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!