அதிர்ச்சி... இன்போசிஸ் சுதா மூர்த்தியை மிரட்டிய சைபர் க்ரைம் கும்பல்!

 

இன்போசிஸ் இணை நிறுவனர் நாராயண மூர்த்தியின் மனைவியும், மாநிலங்களவை எம்.பியுமான சுதா மூர்த்தியை சைபர் க்ரைம்  கும்பல் மிரட்டியுள்ளது வெளிச்சத்துக்கு வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து தெரிவித்த காவல்துறையினரின் செய்திபடி, “கடந்த செப்டம்பர் 5ம் தேதி காலை 9:40 மணிக்கு, சுதா மூர்த்திக்கு தெரியாத ஒரு செல்போன் எண்ணிலிருந்து அழைப்பு வந்தது. மறுபுறம் பேசிய நபர் தன்னை மத்திய தொலைத்தொடர்புத் துறை ஊழியர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். சுதா மூர்த்தியின் மொபைல் எண் ஆதாருடன் இணைக்கப்படவில்லை என்றும், அந்த எண்ணிலிருந்து சுதா மூர்த்தியின் ஆட்சேபணைக்குரிய வீடியோக்கள் சில இணையத்தில் பதிவிடப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

இதையடுத்து தனிப்பட்ட தகவல்களை கேட்டும் தொலைத்தொடர்புத்துறை சுதாவின் செல்போன் எண்ணுக்கு அனைத்து வித சேவைகளையும் நிறுத்தப் போவதாகவும் அந்த நபர் மிரட்டியுள்ளார்.ட்ரூகாலரில் போன் செய்தவர் என்னை எண்ணைச் சரிபார்த்தபோது, அது 'தொலைத்தொடர்புத் துறை' என்று தோன்றியுள்ளது. இருப்பினும் அந்த நபரின் பேச்சு குறித்து சுதா மூர்த்தி சந்தேகம் அடைந்தார்.இந்த மோசடி முயற்சி தொடர்பாக சுதாமூர்த்தி சார்பாக சைபர் கிரைம் போலீசாரிடம் கடந்த செப்டம்பர் 20ம் தேதி புகார் அளிக்கப்பட்டது. அடையாளம் தெரியாத நபர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?