undefined

மோந்தா புயல் இன்று மாலை கரையைக் கடக்கும்...  தமிழகத்திற்கு கனமழை அலெர்ட்!  

 

வங்கக் கடலில் உருவான மோந்தா புயல்  இன்று அக்டோபர் 28ம் தேதி  ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே கரையைக் கடக்கவுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது மணிக்கு 17 கி.மீ. வேகத்தில் வடமேற்கு திசையில் நகரும் இப்புயல், நாளை காலை தீவிர புயலாக வலுப்பெற்று மாலை அல்லது இரவு நேரத்தில் கரையை அடையும் என கூறப்பட்டுள்ளது. புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும், பின்னர் அது படிப்படியாக வலுவிழக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மோந்தா புயலின் தாக்கத்தால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக திருவள்ளூர் மாவட்டத்தில் மிக கனமழை பெய்யும் என்பதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை ஏற்படும் வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதே சமயம், கடலோர பகுதிகளில் அக்.28 முதல் அக்.30 வரை மணிக்கு 65 முதல் 110 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கடந்த அக்டோபர் 1 முதல் 27 வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 230 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது; இது வழக்கத்தை விட 57 சதவீதம் அதிகமாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!