மோந்தா புயல்... கடைகள், வணிக வளாகங்களை மூட உத்தரவு!
வங்கக் கடலில் உருவாகிய மோந்தா புயல் இன்று காலை தீவிர புயலாக வலுப்பெற்று, ஆந்திரக் கடற்கரை நோக்கி வேகமாக நகர்ந்து வருகிறது. இன்று மாலை அல்லது இரவு கரையை கடக்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. புயல் கரையைக் கடக்கும் போது 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்றும், அதனுடன் பலத்த மழை பெய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதன் தாக்கம் ஆந்திரம் மற்றும் ஒடிசா மட்டுமின்றி புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் ஏனாம் மண்டலத்திலும் உணரப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஏற்கெனவே அங்கு பள்ளி, கல்லூரிகளுக்கு மூன்று நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.
புயல் தாக்கம் தீவிரமாக இருக்கும் வாய்ப்பை முன்னிட்டு, ஏனாம் மண்டலத்தில் உள்ள கடைகள் மற்றும் வணிக வளாகங்களை இன்று பகல் 12 மணிக்கே மூட உத்தரவிட்டுள்ளார் மண்டல அதிகாரி அன்கித் குமார். மேலும், அவசரநிலை சேவைகள், மருத்துவ வசதிகள் மற்றும் மின்சாரப் பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!