கரூரில் பலி எண்ணிக்கை 41 ஆக உயர்வு!
கரூர் மாவட்டத்தில் தவெக பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 8 குழந்தைகள் உட்பட 41 பேர் பலியாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வேலூச்சாமிபுரத்தில் வசித்து வரும் 65 வயது சுகுணா என்பவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மட்டும் மொத்தம் 51 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அவா்களில் ஒருவரின் நிலைமை மட்டும் கவலைக்கிடமாக இருப்பதாகவும் மற்றவர்கள் நலமாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் 31 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!