undefined

 கடைசி 3 ஐசிசி இறுதிப்போட்டிகளிலும் தோல்வி... தொடரும் தென்னாப்பிரிக்கா மகளிர் அணியின் சோகம்!

 
 

மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவிடம் தோல்வி அடைந்ததால், தென்னாப்பிரிக்கா மகளிர் அணியின் கோப்பை கனவு மீண்டும் நொறுங்கியுள்ளது.

நவி மும்பையில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில், இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 298 ரன்கள் சேர்த்தது. ஷபாலி வர்மா 87, தீப்தி சர்மா 58, ஸ்மிருதி மந்தனா 45 ரன்கள் சேர்த்து அணியின் ரன்களை உயர்த்தினர்.

பின்னர் 299 ரன்கள் என்ற கடின இலக்குடன் மைதானம் இறங்கிய தென்னாப்பிரிக்கா அணியில் கேப்டன் லாரா வால்வார்ட் தனித்து நின்று 101 ரன்கள் எடுத்தாலும், மற்ற வீராங்கனைகள் தொடர்ந்து அவுட் ஆகி வெளியேறினர். 45.3 ஓவர்களில் 246 ரன்களுக்கு அணி ஆட்டமிழந்தது. இதனால் இந்தியா 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையை முதல் முறையாக கைப்பற்றியது.

இந்த தோல்வியால், தென்னாப்பிரிக்கா மகளிர் அணி மூன்றாவது முறை ஐசிசி இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்துள்ளது. 2023, 2024ம் ஆண்டுகளில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரிலும், இம்முறை நடைபெற்ற 2025ம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையிலும் இறுதி கட்டத்தில் தோல்வியடைந்து, கோப்பையை கைப்பற்ற முடியாமல் தவித்துள்ளது.இதனால் தென்னாப்பிரிக்கா மகளிர் அணிக்கு “இறுதி வரை போராடி தோல்வி அடையும் அணி” என்ற பெயர் ரசிகர்களிடையே நிலைத்து வருகிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!