வங்கக் கடலில் அக்.21ல் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு!
வங்கக் கடலில் அக்.21ம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக் கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆய்வு மைய அலுவலகத்தில் தென் மண்டல வானிலை ஆய்வு மையத் தலைவர் அமுதா கூறுகையில், “ஆழ்க்கடலில் உள்ள மீனவர்கள் 21 தேதிக்குள் கரைக்கு திரும்ப வர வேண்டும். அடுத்த ஐந்து நாட்களுக்கு சூறாவளி காற்று மணிக்கு 35–45 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோமீட்டர் வேகத்திலும் வீசும். இதனால் தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகள், தெற்கு மற்றும் மத்திய வங்கக் கடல் பகுதிகள், அரபிக் கடலின் லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு பகுதிகள் உள்ளிட்ட பகுதிகளில் மீனவர்கள் செல்ல வேண்டாம்.”
அடுத்த 24 மணி நேரத்தில் அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும்; 21-ம் தேதி வங்கக் கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழகத்தை நோக்கி நகர்ந்தால், இடி மின்னல் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
“பொதுமக்கள் மொபைல் போன் மற்றும் எலக்ட்ரானிக் சாதனங்களை பயன்படுத்துவதில் எச்சரிக்கை பின்பற்ற வேண்டும். தீபாவளி பண்டிகை அன்று சென்னையில் மிதமான மழை பெய்யும். மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள், குறிப்பாக நீலகிரி, கோவை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது” என அவர் தெரிவித்தார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!