undefined

 அதிர்ச்சி... பர்வதமலை ஏறியதில் 70 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து பக்தர் உயிரிழப்பு!

 
 

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பர்வதமலையில் பல மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் மலையேறி சென்று தரிசிக்கின்றனர். இந்நிலையில் பர்வதமலை ஏறிய போது 70 அடி உயரத்தில் இருந்து பக்தர் ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அருகே தென்மகாதேவமங்கலம், கடலாடி இடையே பருவதமலை அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 4,560 அடி உயரம் கொண்ட இந்த மலை மீது, அமைந்துள்ள பிரம்மராம்பிகை சமேத மல்லிகார்னேஸ்வரர் சாமி கோவில் பிரசித்தி பெற்றதாகும்.

மூலிகை, செடி, கொடி மரங்கள் நிறைந்த இந்த சிறப்பு வாய்ந்த தென் கைலாயம் என்று அழைக்கப்படும் பருவதமலைக்கு தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பவுர்ணமி, அமாவாசை தினங்களில் மற்றும் வார விடுமுறை நாட்களிலும் வந்து, செங்குத்தான இம்மலை மீது ஏறி சென்று பக்தர்களே மலை மீது உள்ள சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்து வழிபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சேலம் மாவட்டம் வாழப்பாடி கிராமம் செல்லப்ப நகரை சேர்ந்தவர் பழனிவேல் (46), டிராக்டர் மெக்கானிக். இவர் அவரது நண்பர்களுடன் பருவதமலையில் சாமி தரிசனம் செய்வதற்காக வந்தார். அவர்கள் பருவதமலை மீது ஏறி சென்று கொண்டிருந்தனர். மலை ஏறும்போது ஒரு இடத்தில் ஏணிப்படி உள்ளது. அதன் வழியாக பக்தர்கள் ஏறிச் செல்கிறார்கள். 

இந்நிலையில் ஏணிப்படியில் ஏறும்போது திடீரென நிலை தடுமாறிய பழனிவேல் சுமார் 70 அடி உயரத்தில் இருந்து பாறையின் மீது விழுந்தார். இதில் படுகாயம் ஏற்பட்டு மயங்கினார். உடன் சென்ற நண்பர்களும் மலை மீது ஏறிக்கொண்டிருந்த பக்தர்களும் இதனை பார்த்து அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?