undefined

 அக்டோபர் 21, 22 தேதிகளில் சபரிமலையில் பக்தர்களுக்கு தடை... ஜனாதிபதி வருகை! 

 
 

ஐப்பசி மாத பூஜையின் நிறைவு நாளான அக்டோபர் 22ஆம் தேதி, ஜனாதிபதி திரவுபதி முர்மு சபரிமலையில் அய்யப்பனை தரிசிக்க உள்ளார். இதையொட்டி சபரிமலைக்கு அக்டோபர் 21 மற்றும் 22 ஆகிய இரண்டு நாட்களில் பக்தர்களின் தரிசனத்திற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை அக்டோபர் 17 மாலை 4 மணிக்கு திறக்கப்படுகிறது. வழக்கமான பூஜைகள் மறுநாள் காலை தொடங்கி இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும். ஜனாதிபதி 21ஆம் தேதி திருவனந்தபுரம் வரவுள்ளதாகவும், மறுநாள் காலை ஹெலிகாப்டர் மூலம் நிலக்கல் வந்துசேர்ந்து, அங்கிருந்து பம்பை வழியாக சன்னிதானம் சென்று பகல் 12.30 மணியளவில் சாமி தரிசனம் செய்வார் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் தரிசனத்திற்குப் பிறகு சன்னிதானத்தில் ஓய்வெடுத்து மீண்டும் நிலக்கல் வழியாக திருவனந்தபுரம் திரும்புவார். பின்னர் 22ஆம் தேதி வர்க்கலாவில் நாராயண குரு ஆசிரம நிகழ்வுகளில் கலந்து கொண்டு, 24ஆம் தேதி வரை கேரளாவில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். ஜனாதிபதி வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன மற்றும் அந்த இரண்டு நாட்களுக்கான ஆன்லைன் முன்பதிவுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?