undefined

 ‘தங்கல்’ பட நடிகை இளம் வயதிலேயே திருமணம்... குவியும் வாழ்த்துக்கள்!

 
 

அமீர் கான் நடித்த தங்கல் படத்தில் சிறப்பான நடிப்பால் அனைவரையும் கவர்ந்த ஜைரா வாசிம், இளம் வயதில் திருமணம் செய்து கொண்டதாக அறிவித்துள்ளார்.

2016-ம் ஆண்டு வெளியான தங்கல் படம், மல்யுத்த வீராங்கனைகள் கீதா மற்றும் பபிதா போகத் அவர்களின் உண்மை வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது. இதில் அமீர் கானின் இளைய மகளாக நடித்த ஜைரா வாசிம், 16 வயதிலேயே சிறந்த துணை நடிகைக்கான தேசிய திரைப்பட விருதைப் பெற்றார். பின்னர் சீக்ரெட் சூப்பர் ஸ்டார் படத்திலும் அவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது.

ஆனால் 2019-ல் மத காரணங்களுக்காக திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்துவதாக ஜைரா அறிவித்தார். அதன் பின் அவர் சமூக ஊடகங்களில் தனது மதநம்பிக்கைகள் மற்றும் ஆன்மிக வாழ்வை பற்றிய பதிவுகளைப் பகிர்ந்து வந்தார்.

தற்போது 24 வயதாகும் ஜைரா, தனது நிகாஹ் (திருமணம்) பற்றிய தகவலை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அதில், தனது மற்றும் மணமகனின் முகம் தெரியாத புகைப்படத்துடன், “என் வாழ்க்கையின் புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?