ஐபிஎல் 2026 தொடரில் தோனி மீண்டும் விளையாடுவார்...  சிஎஸ்கே அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

 
 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன், 2026ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் மகேந்திர சிங் தோனி மீண்டும் விளையாடுவார் என்று அறிவித்துள்ளார்.இந்திய அணியின் முன்னாள் கேப்டனாக இருந்து, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னரும் தோனி, ஐபிஎல் லீக்கில் சிஎஸ்கே அணிக்காக தொடர்ந்து விளையாடி வருகிறார்.

2024ஆம் ஆண்டு தொடக்கத்தில், கேப்டன் பொறுப்பை ருதுராஜ் கெய்க்வாட்டிடம் ஒப்படைத்திருந்தார். எனினும், அவர் காயம் காரணமாக விலகியதால், தோனி மீண்டும் அணியின் தலைமையை ஏற்றார்.அந்த சீசனில் சிஎஸ்கே வெறும் 4 வெற்றிகளை மட்டுமே பதிவு செய்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் முடித்தது. இதனால், தோனி ஓய்வெடுக்கலாம் என்ற ஊகங்கள் கிளம்பியிருந்தன.

ஆனால், தோனி தனது உடல்நிலை பார்த்து 2026-இல் விளையாடுவது குறித்து முடிவு செய்வேன் என்று கூறியிருந்தார். தற்போது அந்த சந்தேகத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், “தோனி 2026 ஐபிஎல் தொடரில் நிச்சயம் விளையாடுவார்” என்று சிஎஸ்கே சிஇஓ காசி விஸ்வநாதன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு வெளியாகியதும்   சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் மற்றும் தோனி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாட்டத்தை தொடங்கியுள்ளனர்.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!