undefined

பாஜக எம்.பி  மகளிர் உலகக் கோப்பை சாம்பியன்களுக்கு வைர நெக்லஸ் பரிசு ! 

 
 

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி முதல் முறையாக 50 ஓவர் உலகக் கோப்பை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. நவி மும்பையில் நடைபெற்ற இறுதி போட்டியில், இந்திய அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, வரலாற்றை படைத்தது. இந்த வெற்றியால் நாடு முழுவதும் மகிழ்ச்சி அலை பெருகி வருகிறது.

இந்நிலையில், குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த பிரபல வைர தொழிலதிபரும், பாஜக ராஜ்யசபா எம்பியுமான கோவிந்த் டோலக்கியா, மகளிர் அணிக்கு சிறப்பு பரிசாக வைர நெக்லஸ்கள் வழங்குவதாக அறிவித்துள்ளார். அதோடு, வீராங்கனைகளின் வீடுகளுக்கு சோலார் பேனல்கள் அமைத்து வழங்குவதாகவும் கூறியுள்ளார். இதற்காக அவர் முன்பே பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லாவுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

கோவிந்த் டோலக்கியா, ஸ்ரீ ராம்கிருஷ்ணா எக்ஸ்போர்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் உரிமையாளராகவும், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு நெருக்கமானவராகவும் அறியப்படுகிறார். சமூகநல பணிகளில் தீவிரமாக ஈடுபடும் இவர், 2021-ஆம் ஆண்டில் அயோத்தி ராமர் கோவில் கட்டுமானத்திற்காக ரூ.11 கோடி நன்கொடை வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!