இந்தியா - பாகிஸ்தான் மேட்ச்ல இதை கவனிச்சீங்களா? உலக சாதனைப் படைத்த அபிஷேக் சர்மா!

 

17 வது ஆசிய கோப்பை கிரிக்கெட் துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. இந்தப் போட்டியில்  சூப்பர் 4 சுற்றுக்கு வந்துள்ள நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம்  அணிகள் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் டாப் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.  

இந்நிலையில் துபாயில் நேற்று இரவு நடந்த சூப்பர் 4 சுற்றின் 2வது ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் குவித்தது.  அதிகபட்சமாக சகிப்சதா பர்ஹான் 58 ரன்கள் சேர்த்தார். இந்திய தரப்பில் ஷிவம் துபே 2 விக்கெட்டும், ஹர்திக் பாண்ட்யா, குல்தீப் யாதவ் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 18.5 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 174 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 74 ரன்களும், சுப்மன் கில் 47 ரன்களும் அடித்தனர். பாகிஸ்தான் தரப்பில் ஹாரிஸ் ரவூப் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அபிஷேக் சர்மா ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.  

இந்த ஆட்டத்தில் மொத்தம் 5 சிக்சர்கள் விளாசிய அபிஷேக் சர்மா 2 சிக்சர்கள் அடித்திருந்த போது சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 50 சிக்சர்கள் மைல்கல்லை எட்டினா. இந்த 50 சிக்சர்களை வெறும் 331 பந்துகளில் அடித்துள்ளார். இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த பந்துகளில் 50 சிக்சர்கள் அடித்த வீரர் என்ற உலக சாதனையை அபிஷேக் சர்மா படைத்துள்ளார். குறைந்த பந்துகளில் அதிக சிக்சர்கள் அடித்தவர்களின் பட்டியலில் 1. அபிஷேக் சர்மா - 331 பந்துகள் 2. எவின் லூவிஸ் - 366 பந்துகள் 3. ஆந்த்ரே ரசல் - 409 பந்துகள் 4. ஹஸ்ரத்துல்லாஹ் ஜசாயி - 492 பந்துகள் 5. சூர்யகுமார் யாதவ் - 510 பந்துகள்

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?