அக்டோபர் 26 முதல் இந்தியா-சீனா இடையே நேரடி விமான சேவை!
2020ல் இந்தியா - சீனா இடையே நேரடி விமான சேவை நிறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து லடாக்கில் ஏற்பட்ட மோதல் காரணமாக இந்தியா - சீனா நாடுகளுக்கு இடையே பதற்றம் நிலவி வருகிறது. கொரோனா பெருந்தொற்றுக்கு பின் மற்ற நாடுகளுக்கு சீனாவில் இருந்து நேரடி விமான போக்குவரத்து தொடங்கப்பட்டாலும், இந்தியாவில் இருந்து விமான போக்குவரத்து தொடங்கப்படவில்லை.
இதன் பிறகு இரு நாட்டு தலைவர்களுக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு உறவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் பிரதமர் மோடி சீனா சென்று, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் கலந்து கொண்டார்.
இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து வரும் அக்டோபர் 26ம் தேதி நேரடி விமான சேவையை தொடங்குவதற்கு ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் இண்டிகோ நிறுவனம் 'தூதரக ரீதியில் ஏற்பட்ட முடிவுகளை தொடர்ந்து, மேற்கு வங்கத்தின் தலைநகர் கொல்கட்டாவில் இருந்து சீனாவின் குவாங்சு நகருக்கு அக்டோபர் 26 ம் தேதி முதல் தினசரி விமான சேவை தொடங்கப்படும்.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!