undefined

முகநூலில் அருவருக்கத்தக்க பதிவுகள்.. மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் பாஜக நிர்வாகி.. உயர்நீதிமன்றம் காட்டம்!

 

மத மோதல்களை உருவாக்கும் பாஜக நிர்வாகியின் பதிவுகளை நீக்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியை சேர்ந்த அகமது பயாஸ் என்பவர் உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், ""ராமநாதபுரம் மாவட்ட நம்புதலை பகுதியை சேர்ந்த குருஜி, பா.ஜ.க, ஆன்மிக பிரிவு மாநில பொறுப்பாளராக இருந்து வருகிறார்.தொண்டி பகுதியில், இந்து, முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர்கள் வாழ்ந்து வருகிறார்கள்.

இந்த மூன்று சமூகத்தினரும் சகோதர்களாகவே வாழ்கிறார்கள், அவர்களுக்குள் பிரச்சனையை ஏற்படுத்தும் வகையில் குருஜி தொடர்ந்து செயல்பட்டு வருகிறார் . முஸ்லிம்களுக்கு எதிராக தரம் தாழ்ந்த முகநூல் பதிவுகளை வெளியிடும் பாஜக நிர்வாகி குருஜி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் ' என மனுவில் கூறப்பட்டுள்ளது.'' இது உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நீதிபதி பி.புகழேந்தி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ''பேஸ்புக்கில் அருவருக்கதக்க மோசமான பதிவுகளை பாஜக நிர்வாகி பதிவிட்டு வருகிறார்.

இதுபோன்ற மோசமான பதிவுகளை எப்படி பதிவு செய்ய முடியும்?. மத மோதல்களை உருவாக்கும் பா.ஜ.க நிர்வாகிகளின் பதவிகளை குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். சர்ச்சைக்குரிய புகைப்படங்களை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்குமாறு ராமநாதபுரம் மாவட்ட எஸ்பிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!