undefined

மதுபானத்தில் தகராறு... கட்டிடத் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை!  

 
 

 

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள ஆலங்கோடு கண்ணோடு பகுதியில் வசிக்கும் கட்டிட தொழிலாளர் ராஜேந்திரன் (49) மது பழக்கத்தால் தகராறு செய்து வந்ததாக குடும்ப உறுப்பினர்கள் கூறியுள்ளனர். சம்பவத்தன்று திங்கள்சந்தைக்கு சென்ற ராஜேந்திரன் வீட்டிற்கு திரும்பிய போது, வாங்கிய மதுபாட்டிலை வீட்டில் மறைத்து வைத்திருந்தார். அவரது மகள் அதை எடுத்துக்கொண்டு வெளியே ஊற்றியதனால் மனமுடைந்து ராஜேந்திரன் பூச்சிக்கொல்லி மருந்து குடித்து விட்டார்.

அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக அவரை ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் அனுப்பி சிகிச்சை அளித்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக முட்டத்தில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மாற்றியுள்ளனர்.

எனினும், தீவிர சிகிச்சையின்பாலும் ராஜேந்திரன் பரிதாபமாக இறந்தார். அவரது மனைவி அகிலா கொடுத்த புகாரின் பேரில் மணவாளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!