undefined

 கணவருடன் தகராறு... இளம்பெண் தீக்குளித்து தற்கொலை!

 
தூத்துக்குடி மாவட்டம், தாளமுத்து நகரில், கணவருடன் ஏற்பட்ட குடும்ப பிரச்சனை காரணமாக பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

தூத்துக்குடி தாளமுத்து நகர், டி.சவேரியார் புரத்தைச் சேர்ந்தவர் ராஜன் பிரபு. இவரது மனைவி குருமணி செல்வம். ராஜன் பிரபு ஆடுகள் வளர்த்து வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில், ராஜன் பிரபு வளர்த்து வந்த ஆடுகளில் 2 ஆடுகள் காணாமல் போய் விட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர் தன்னுடைய மனைவி குருமணியைத் திட்டியுள்ளார். 

கணவர் தொடர்ந்து திட்டியதால் மனவேதனையடைந்த குருமணி செல்வம், தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். 

உடல் முழுவதும் கருகிய நிலையில், பலத்த தீக்காயம் அடைந்த அவரை தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சைப் பலனளிக்காமல் நேற்றிரவு பரிதாபமாக இறந்தார். 

இந்த சம்பவம் குறித்து தாளமுத்து நகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜெயந்தி வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை