தீபாவளி கொண்டாட்டம்... கர்நாடகாவில் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி
பெங்களூரு, அக்டோபர் 9: நாட்டில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை 20-ந் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்து மக்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் தீபாவளி முக்கியமானது. கர்நாடகத்தில் 20-ந் தேதி தொடங்கி 3 நாட்கள் தீபாவளி வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இந்த 3 நாட்களிலும் பொதுமக்கள் பண்டிகையை கொண்டாடுவதற்காக பட்டாசு வெடிப்பார்கள். அதாவது 20-ந்தேதி தமிழர்கள், 21-ந்தேதி வடமாநில மக்கள், 22-ந்தேதி கன்னட மக்கள் தீபாவளியை கொண்டாட உள்ளனர்.
பண்டிகையின் பாரம்பரியத்தில் பலகாரங்கள் மற்றும் பட்டாசு முக்கிய இடம் வகிக்கின்றன. ஆனால் 2018-ம் ஆண்டு முதல் அதிகளவில் பட்டாசு வெடிப்பதால் காற்று மாசு ஏற்பட்டு சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாகவும், இதனையடுத்து சுப்ரீம் கோர்ட்டு கட்டுப்பாடுகளை விதித்தது.
அந்தக் கட்டுப்பாடுகளின் அடிப்படையில் கர்நாடகத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு வெடிக்க இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டும் அனுமதி வழங்கப்படுகிறது. மேலும் பசுமை பட்டாசுகள் மட்டுமே வெடிக்க வேண்டும் என்றும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா வெளியிட்டுள்ள அறிக்கையில், சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை அனைவரும் பின்பற்ற வேண்டும், அந்த நேரத்தை தவிர மற்ற நேரங்களில் பட்டாசு வெடிக்க முழுமையாக தடை விதிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!