தீபாவளி நாளில் நகைப் பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி... தங்கம் சவரனுக்கு ரூ.640 குறைவு!
தீபாவளி நாளில் நகைப்பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக தொடர்ச்சியாக உயர்ந்து கொண்டிருந்த ஆபரணத் தங்க விலையில் இன்று காலை கணிசமான அளவு சரிந்து சவரனுக்கு ரூ.640 குறைந்துள்ளது.
இந்த மாதம் ஆரம்பத்திலிருந்து தங்க விலை படிப்படியாக உயர்ந்து சவரனுக்கு ரூ.97 ஆயிரத்தைக் கடந்து சென்ற நிலையில், இன்று சவரனுக்கு ரூ.640 குறைந்து 95,360 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு கிராம் தங்கம் ரூ.80 குறைந்து 11,920 ரூபாயாக விற்பனையாகிறது.
ஆண்டின் தொடக்கத்தில் சவரனுக்கு ரூ.60 ஆயிரம் மட்டுமே இருந்த விலை கடந்த சில வாரங்களில் வேகமாக உயர்ந்திருந்தது. இதனால் பொதுமக்களும் முதலீட்டாளர்களும் கவலை தெரிவித்தனர். இந்நிலையில் விலையில் ஏற்பட்ட இன்றைய தளர்ச்சி, தங்கம் வாங்க விரும்பும் நுகர்வோருக்கு ஓரளவு நிம்மதியை அளிக்கிறது.
தங்கம் விலையில் மேலும் குறைவு தொடருமா அல்லது மீண்டும் உயருமா என்ற எதிர்பார்ப்பில் நகைக்கடை வியாபாரிகள் மற்றும் முதலீட்டாளர்கள் கவனித்துக் கொண்டுள்ளனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!