உஷார்... உடற்பயிற்சி செய்யும் போது இந்த தவற செய்யாதீங்க!
உடல் ஆரோக்கியத்தை பேணவும், அழகான உடல் வடிவத்தை பெறவும் அனைவரும் உடற்பயிற்சியைத் தொடங்குகிறோம். ஆனால், உடற்பயிற்சி செய்யும் போது சில சிறிய தவறுகள் பெரிய பிரச்சனைகளுக்குக் காரணமாகலாம். குறிப்பாக, தவறான பயிற்சி முறைகள் அல்லது மிகைப்படுத்தப்பட்ட பயிற்சிகள் தசை இழப்புக்கு வழிவகுக்கக்கூடும். தசைகள் குறையும்போது உடல் பலவீனமாகி, மெட்டபாலிசமும் குறைவடையும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
அதிகப்படியான உடற்பயிற்சி தசை வளர்ச்சிக்கு தடையாகும். பலர் விரைவாக முடிவுகளைப் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் கடுமையாக பயிற்சி செய்கிறார்கள். ஆனால், உடல் ஓய்வெடுப்பது மிக அவசியம். ஓய்வின்றி பயிற்சி செய்வது உடல் சோர்வடையச் செய்யும், தூக்கத்தையும் மனநிலையையும் பாதிக்கும். இதனால் தசை வளர்ச்சி தடைபடுவதோடு, தசை இழப்பும் ஏற்படலாம். அதேபோல், போதுமான புரதம் இல்லாமல் உடற்பயிற்சி செய்வதும் ஆபத்தானது. உணவில் புரதம் குறைந்தால் தசை உருவாக்கும் செயல்முறை பாதிக்கப்படும். எனவே, புரதம் நிறைந்த உணவுகள் மற்றும் மருத்துவர் பரிந்துரைக்கும் புரதச் சேர்மங்கள் அவசியம்.
மேலும், ஒரே எடையை மீண்டும் மீண்டும் தூக்குவது தசை வளர்ச்சியைத் தாமதப்படுத்தும். உடற்பயிற்சிகளில் மாறுபாடு அவசியம். இலகுவான எடைகளை அதிக முறை தூக்குவதன் மூலம் தசை வலிமை மேம்படும். கார்டியோ பயிற்சிகள் எடை குறைப்பதற்கு உதவினாலும், அதில் மட்டும் கவனம் செலுத்துவது தவறு. அதிகப்படியான கார்டியோ தசை இழப்பை ஏற்படுத்தக்கூடும். எனவே, கார்டியோவுடன் வலிமை பயிற்சிகளையும் இணைத்து சமநிலை உடற்பயிற்சி முறையை பின்பற்றுவது தசை வளர்ச்சிக்கும், நீண்டகால ஆரோக்கியத்திற்கும் சிறந்தது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!