ஆவின் பால் பண்ணையில் இயந்திரத்தில் துப்பட்டா சிக்கி பெண் ஊழியர் பலி... வழக்கில் திடீர் விருப்பம்!
தமிழகத்தில் திருவள்ளூர் மாவட்டம், காக்களூரில் உள்ள ஆவின் பால் பண்ணையில் பணிபுரிந்து வந்தவர் உமாராணி . இவர் கன்வேயர் பெல்டில் துணி, தலைமுடி சிக்கியதால் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில், ஆவின் பால் பண்ணையில் வேலை செய்த பெண் ஊழியர் உயிரிழப்பு குறித்து அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம் அளித்துள்ளார்.
அதில் “25 ஆண்டுகளாக இயங்கிவந்த இயந்திரத்தில் இதுவரை எந்த பிரச்னையும் இல்லை. கன்வேயர் பெல்டில் பெண் ஊழியரின் துப்பட்டா சிக்கியது தான் அனைத்துக்குமே அடிப்படை!
பணி நேரங்களில் பெண்கள் பொதுவாக துப்பட்டா அணிய அனுமதிப்பது இல்லை. இனி கோட் போன்ற உடையை அணிந்து கொள்ளலாம் எனவும், இது குறித்து விரிவன ஆலோசனை நடக்கிறது. உயிரிழந்த பெண்ணுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொண்டு பேசியுள்ளேன்" என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஆவின் பால் பண்ணை பெண் ஊழியர் உயிரிழந்த சம்பவத்தில், பணியில் அலட்சியமாக செயல்பட்டதாக ஒப்பந்த நிறுவனத்தில் பணியாற்றிய மேற்பார்வையாளர் வருண்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து வருண்குமாரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!