undefined

தசரா திருவிழா சப்பர பவனி, மாவிளக்கு ஊர்வலம்... திரளான பக்தர்கள் பங்கேற்பு!

 

தூத்துக்குடியில் தசரா திருவிழாவை முன்னிட்டு  சிவன் கோவில் முன்பு பல்வேறு அம்மன் ஆலயங்களின் சப்பர பவனி நடைபெற்றது. 

தூத்துக்குடியில் உள்ள அம்மன் கோவில்களில் தசரா திருவிழா கடந்த கடந்த செப்.23ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்களாக வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதைத் தொடர்ந்து தூத்துக்குடி மாநகர் மாவட்ட இந்து முன்னணி சார்பில் அனைத்து சப்பர பேரணி நேற்று மாலை நடந்தது. பேரணியில் கிராம தேவதை என அழைக்கப்படும் மேலூர் பத்திரகாளி அம்மன், முத்தாரம்மன்,  உச்சிமாகாளியம்மன், சண்முகபுரம் பத்திரகாளியம்மன்,  உள்ளிட்ட தூத்துக்குடி மாநகரில் உள்ள அம்மன் கோவில்களில் உள்ள சப்பரங்கள் பவனியாக வந்தன. 

தொடர்ந்து 500க்கும் மேற்பட்டபெண்கள் மாவிளக்கு ஏந்தியும் ஊர்வலமாக சென்றனர்.  இந்த பேரணி சிவன் கோவில் முன்பு வந்தடைந்தது. அங்கு அனைத்து அம்மன்களுக்கும் பன்னீர் அபிஷேகம் செய்து பட்டுசாத்தி எதிர்சேவை நிகழ்ச்சி நடந்தது.

சப்பர பேரணி முன்பாக மேளதாளம் முழங்க ஒயிலாட்டம் கரகாட்டம் மற்றும் சிலம்பம் உள்ளிட்ட வீர விளையாட்டுக்கள் விளையாடியபடி பக்தர்கள் ஊர்வலமாக வர அம்மன் ஆலயங்களின் இந்த சப்பர பேரணியை ஏராளமான பக்தர்கள் கண்டுகளித்தனர். இதில் சிறப்பாக அலங்காரம் செய்யப்பட்ட அனைத்து சப்பரங்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?