ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்... ரிக்டர் அளவில் 6.3.. 7 பேர் பலி; 150 பேர் படுகாயம்!
ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பலரை பலியெடுத்தது. ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் அந்நாட்டில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலநடுக்கம் மசார்-இ-ஷெரிஃப் நகருக்கு அருகே, சுமார் 28 கிலோமீட்டர் ஆழத்தில் நிகழ்ந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. 5.23 லட்சம் மக்கள் வசிக்கும் அந்தப் பகுதியில் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. ஆரம்பக் கணக்கின் படி, குறைந்தது 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 150க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.
மீட்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பல இடங்களில் சாலைகள் சேதமடைந்ததால், மீட்பு பணிகள் சிரமமாக நடைபெறுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் தேசிய பேரிடர் மேலாண்மை முகமை வெளியிட்ட அறிக்கையில், “நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் உயிரிழப்புகள் பற்றிய முழுமையான விவரங்கள் விரைவில் வெளியிடப்படும்” என கூறப்பட்டுள்ளது.
பெரிய புவித்தட்டுகள் சந்திக்கும் பகுதியில் அமைந்துள்ளதால், ஆப்கானிஸ்தான் அடிக்கடி நிலநடுக்கத்தால் பாதிக்கப்படும் நாடாகும். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தில் சுமார் 1,000 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!