4.2 ரிக்டர் அளவில் மியான்மரில் நிலநடுக்கம்!
மியான்மர் நாட்டில் இன்று அக்டோபர் 10ம் தேதி வெள்ளிக்கிழமை அதிகாலை 5.53 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது இந்த நிலநடுக்கம் சுமார் 10 கி.மீட்டர் ஆழத்தில் 4.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் (என்சிஎஸ்) தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தினால், ஏற்பட்ட உயிர் மற்றும் பொருள் சேதங்கள் குறித்து எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை. இருப்பினும், மிதமான அளவிலான இந்த நிலநடுக்கத்தால், பெரியளவிலான பாதிப்புகள் எதுவும் ஏற்பட்டிருக்காது என கருதப்படுகிறது
ஏற்கனவே அக்டோபர் 5ம் தேதி மியான்மரில் ஏற்பட்ட 3.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கமும், 6 ம் தேதி 3.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம், 3 ம் தேதி மியான்மரில் பூமிக்கடியில் 90 கிலோமீட்டர் ஆழத்தில் 3.3 ரிக்டர் அளவிலான மற்றொரு நிலநடுக்கமும் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!