கரூர் சம்பவம் எதிரொலி... புஸ்ஸி ஆனந்த் தலைமறைவு!
கரூர் சம்பவத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமறைவாகி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடிகரும் தவெக தலைவருமான விஜய் கரூரில் பரப்புரையில் ஈடுபட்டபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது தமிழகத்தையே உலுக்கியுள்ளது. பலியானர்களின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதால் கரூரில் பெரும் சோகமே ஏற்பட்டுள்ளது.
பல அரசியல் தலைவர்களும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்களுக்கு ஆறுதல் சொல்லி வருகின்றனர். தற்போது, கரூர் காவல்துறை சம்பவம் தொடர்பாக த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி என். ஆனந்த், இணைச்செயலர் சி. டி. நிர்மல் குமார், கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது.
இந்த நிலையில், புஸ்ஸி ஆனந்த் மற்றும் மதியழகன் எங்கிருக்கிறார்கள் எனத் தெரியவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. இருவரும் பிரச்னையின் தீவிரத்தால் தலைமறைவாக இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது. கரூர் நெரிசல் பலிகளைத் தொடர்ந்து தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமறைவானதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!