“செங்கோட்டையன் அப்போதே திமுக பி-டீம் வேலையை ஆரம்பித்துவிட்டார்” – எடப்பாடி பழனிசாமி!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது, செங்கோட்டையனை கடுமையாக சாடினார்.
அவர் கூறியதாவது, “செங்கோட்டையன் திமுகவின் பி-டீமாகவே நீண்டநாளாக செயல்பட்டு வருகிறார். கட்சியின் முக்கிய விழாவில் பங்கேற்காமல் புறக்கணித்ததோடு, ஜெயலலிதா அம்மாவின் படம் இடம்பெறவில்லை என தவறான குற்றச்சாட்டு கூறினார். ஆனால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உண்மையை விளக்கியபோதும் அவர் ஏற்கவில்லை.
அதே சமயம், ஒரு சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியின் பேனர்களில் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா படங்கள் இல்லாமல், கருணாநிதி மற்றும் மு.க. ஸ்டாலின் படங்களே இருந்தன. அப்போதே அவர் பி-டீம் வேலையை ஆரம்பித்துவிட்டார்.
செங்கோட்டையன் கடந்த ஆறு மாதங்களாகவே கட்சிக்கு எதிராக நடந்துகொண்டார். அவர் குறிப்பிடும் நபர்கள் அனைவரும் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களே. அப்படிப்பட்டவர்களுடன் இணைந்து செயல்பட்டதால் அவருக்கு எதிராக கட்சியிலிருந்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. கட்சிக்கு துரோகம் செய்தால் இதுதான் விளைவு.
பொதுக்குழு தீர்மானம் நிறைவேற்று நீக்கப்பட்டவர்களுடன் தொடர்பு வைத்திருந்தால், அதிமுக தலைமை அமைதியாக இருக்காது. அதிமுக தலைமைக்கு எதிராக யாராவது செயல்பட்டால், வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருப்பது முடியாது.
திமுகவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வர செங்கோட்டையன், டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் திட்டமிட்டுள்ளனர். ஜெயலலிதா அம்மா நேரில் கட்சியில் இருந்து நீக்கியவர்களுக்கு இன்று அதிமுக பற்றி பேச எந்தத் தகுதியும் இல்லை. சட்டப்பேரவையில் திமுகவை எதிர்த்து ஒரு வார்த்தை கூட செங்கோட்டையன் பேசவில்லை,” என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!