ஈச்சமலை அகத்தியர் கோவில் சிறப்பு  வழிபாடு.. பக்தர்கள் பரவச தரிசனம்!!

 

தேனியில் அமைந்துள்ள ஈச்சமலை மகாலட்சுமி கோவில் பிரசித்தி பெற்றது.அதிலும் இங்குள்ள அகத்தியர் சன்னதியில் பிரதோஷம், அமாவாசை பௌர்ணமி மற்றும் ஆன்மீக சிறப்பு நாட்களில் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறுவது வழக்கம். சிறப்பு நாட்களில் நடைபெறும் அபிஷேக வழிபாட்டை காண பல்வேறு பகுதியில் இருந்து மக்கள் இக்கோவிலுக்கு வருகின்றனர்.

அந்த வகையில் அகத்தியர் சன்னதி முன்பாக விக்னேஸ்வர பூஜை, சங்கல்பம், புண்ணியாகவாசனம், அக்னி பிரதிஷ்டை மற்றும் கலச பூஜை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அகத்தியருக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், பன்னீர் உள்ளிட்ட 11 வகையான திரவிய பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.

பின்னர் அலங்கரிக்கப்பட்ட அகத்தியருக்கு லட்ச தீபம், நட்சத்திர தீபம், கும்ப தீபம் உள்ளிட்ட தீபராதனைகள் காட்டப்பட்டன. இந்நிகழ்வில் அதிக அளவிலான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை