நாளை சென்னை, சென்னை புறநகர் பகுதிகளில் ஞாயிறு அட்டவணைப்படி மின்சார ரயில்கள் இயங்கும்! 

 

சென்னையில் புறநகா் மின்சார ரயில்கள் அக்டோபர் 2ம் தேதி வியாழக்கிழமை  ஞாயிற்றுக்கிழமை அட்டவணைபடி  இயக்கப்படும் என  சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்  சென்னையில் வியாழக்கிழமை அக்டோபர் 2ம் தேதி  சென்ட்ரல்-அரக்கோணம், சென்ட்ரல்-சூலூா்பேட்டை இடையிலும், சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையேயும் தண்டவாளம் உட்பட  பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதையடுத்து சென்னை புறநகா் பகுதி மின்சார ரயில்கள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைபடியே இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் ஆயுத பூஜையை முன்னிட்டு, புதன்கிழமை அக்டோபர் 1ம் தேதி  புறநகா் மின்சார ரயில்கள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைபடியே இயக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது அக்டோபர் 2 ம் தேதியும் அதே அட்டவணையில் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?