’காவலா’ பாட்டுக்கு வைப் ஆன யானை.. நடுரோட்டில் தமன்னா ஸ்டெப் போட்டு அசத்தல்!
‘ஜெயிலர்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘காவலா’ பாடலுக்கு நடுரோட்டில் நடனமாடும் பொம்மை யானையின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. தமன்னாவைப் போல ஸ்டெப் போடும் யானை ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் ‘ஜெயிலர்’. ஜெயிலரில் அனிருத் இசையமைத்த பாடல்கள் அனைத்தும் ஹிட் ஆனது. படத்தின் வெற்றி விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், பின்னணி இசை இல்லாமல் படம் பார்த்ததாகவும், சுமாரானதாகவும் இருந்ததாகவும், ஆனால் அனிருத் இசையில் படத்தைப் பார்த்தபோது அது வேறு லெவலில் இருப்பதாகவும் பாராட்டினார். குறிப்பாக இந்தப் படத்தில் இடம்பெற்ற ‘காவாலா’ பாடல் இணையத்தில் ஹிட் ஆனது.
இந்த பாடல் கடந்த ஆண்டு மிகவும் விரும்பப்பட்ட பாடலாக இருந்தது. யூடியூப்பில் 100 மில்லியன் பார்வைகளையும் கடந்துள்ளது. இந்த நிலையில், யானை உடையை அணிந்த நபர்கள் ‘காவலா’ பாடலுக்கு நடனமாடியுள்ளனர். நிஜமான யானை ஒரு நிமிடம் நடனமாடுவதாக பார்த்தவுடனே பலருக்கு தோன்றுகிறது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!