திரையுலகில் அடுத்தடுத்து சோகம்.. என் உயிர்த் தோழன் பாபு காலமானார்!!

 


இயக்குநர் பாரதி ராஜா இயக்கத்தில் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த திரைப்படம் என் உயிர்த் தோழன். இதில் அறிமுகமானவர் பாபு . இதனாலேயே இவர் என் உயிர்த் தோழன் என்றே அழைக்கப்பட்டார்.  இதில் பாபுவின் நடிப்பை பார்த்து பாபுவுக்கு அடுத்தடுத்து சில படங்கள்   கமிட் ஆகின. தொடர்ந்து ஒரே நேரத்தில் 10 படங்களுக்கு மேல் புக் செய்யப்பட்டார். ’பெரும்புள்ளி’, ’தாயம்மா’, ’பொண்ணுக்குச் சேதி வந்தாச்சு’ ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்தார்.  5வது படமாக ‘மனசார வாழ்த்துங்களேன்’  படப்பிடிப்பில்   சண்டைக் காட்சி படமாக்கப்பட்டது.

காட்சியில் மாடியிலிருந்து ஹீரோ குதிப்பதாக ஷாட்.  இந்த ஷாட்டில் ’டூப் வைத்துக் கொள்ளலாம்’ என இயக்குநர் சொன்னதையும் கேளாமல் ’தத்ரூபமாக இருக்கும்’ எனச் சொல்லி நிஜமாகவே பாபு குதித்திருக்கிறார். அப்போது யாரும் எதிர்பாராத நொடியில் நிலை தடுமாறி பாபு தவறுதலாக வேறு இடத்தில் விழுந்துவிட்டார். இதனால்   அவருடைய முதுகுப் பகுதியில் பலத்த அடிபட்டு எலும்புகள் உடைந்துவிட்டன.அதன்பிறகு முதுகுத் தண்டுவட அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால் அவர் எழுந்து  நிமிர்ந்து உட்காரக் கூட முடியவில்லை.  எத்தனையோ மருத்துவர்கள், சிகிச்சைகள் செய்தாலும் படுத்த படுக்கையானார்.  


1991ல் நடந்த இந்த சம்பவம்   சினிமாக் கனவுகளுடன் வந்த பாபுவின் வாழ்க்கையையே அப்படியே புரட்டிப் போட்டு விட்டது. அன்று முதல் இன்று வரை பாபுவின் வயதான அம்மா மட்டுமே அவரை உடனிருந்து கவனித்து வந்தார். அவருக்கும் 80ஐ கடந்த நிலையில்   சில தினங்களுக்கு முன் பாபுவின் உடல்நிலை மோசமடைய ஆரம்பித்தது. இதனையடுத்து  பாபு சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். நேற்று அவரது உடல்நிலை ரொம்பவே மோசமாகியது.  இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.  கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் இயக்குநர் பாரதிராஜா பாபுவை நேரில் சென்று பார்த்து விட்டு கண்ணீர் விட்டு கதறி அழுதார். ஆசையோடு சினிமாவுக்கு வந்த பாபுவை   மொத்தமாக முடக்கிப் போட்டு, வாழ்க்கையையே முடித்தும் வைத்துவிட்டது ஒரேயொரு சண்டைக் காட்சி. இவரது மறைவிற்கு திரையுலக பிரபலங்கள், உறவினர்கள், நண்பர்கள் , ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 
 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை