கார்த்தி சிதம்பரத்துக்கு எதிரான அமலாக்கத்துறை நடவடிக்கை செல்லும்... தீர்ப்பாயம் உத்தரவு!
ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில், கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக அமலாக்கத்துறை (ED) எடுத்த நடவடிக்கை சட்டபூர்வமானது என பணமோசடி தடுப்பு சட்ட தீர்ப்பாயம் (PMLA Tribunal) உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த வழக்கில், டெல்லியில் உள்ள ரூ.16 கோடி மதிப்பிலான சொத்துகளையும், 7 வங்கி கணக்குகளில் இருந்த ரூ.7 கோடி பணத்தையும் அமலாக்கத்துறை முடக்கியது. இதனை எதிர்த்து கார்த்தி சிதம்பரம், “அமலாக்கத்துறை நடவடிக்கை தவறானது, அரசியல் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டது” எனக் கூறி PMLA தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தார்.
இம்மனுவை தீர்ப்பாயம் விரிவாக விசாரித்தது. இரு தரப்பினரின் வாதங்களையும் கேட்டு தீர்ப்பளித்த தீர்ப்பாயம், “அமலாக்கத்துறை எடுத்த சொத்து முடக்கம் சட்டப்படி செய்யப்பட்டதாகும். அதில் குற்றமில்லை” எனக் கூறி கார்த்தி சிதம்பரத்தின் மேல்முறையீட்டை தள்ளுபடி செய்தது.
இதன் மூலம், கார்த்தி சிதம்பரத்தின் சொத்துகள் மற்றும் வங்கி கணக்குகளை முடக்கிய அமலாக்கத்துறை உத்தரவு தொடர்ச்சியாக அமலில் இருக்கும் நிலையில், வழக்கு மீண்டும் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!