undefined

 நாளை முதல்  எர்ணாகுளம்–பெங்களூரு வந்தே பாரத் ரயில் சேவை... பிரதமர் தொடங்கி வைப்பு! 

 
 

எர்ணாகுளம்–பெங்களூரு உள்பட 4 புதிய வந்தே பாரத் ரயில் சேவைகள் நாளை (சனிக்கிழமை) தொடங்கப்பட உள்ளன. இந்நிகழ்ச்சியை பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியில் இருந்து காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார்.

எர்ணாகுளம்–பெங்களூரு வந்தே பாரத் ரயில், தமிழகத்தின் கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய பகுதிகள் வழியாக இயக்கப்படும். புதன்கிழமையைத் தவிர வாரத்தின் மற்ற நாட்களில் இது இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 12 பெட்டிகளைக் கொண்ட இந்த ரயில், எர்ணாகுளம்–பெங்களூரு இடையே இயக்கப்படும் மூன்றாவது வந்தே பாரத் ரயிலாகும்.

அதே சமயம், கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களை இணைக்கும் முதல் வந்தே பாரத் ரயிலாக இது அமைகிறது. இதன்படி, பெங்களூருவில் இருந்து காலை 5.10 மணிக்கு புறப்படும் ரயில் சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை வழியாக மதியம் 1.50 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும். மறுமார்க்கமாக, எர்ணாகுளத்தில் இருந்து மதியம் 2.20 மணிக்கு புறப்பட்டு இரவு 11 மணிக்கு பெங்களூருவை அடையும்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!